News December 21, 2024
புத்தாண்டு முதல் கட்டிங், சேவிங் விலை உயர்வு

தமிழகம் முழுவதும் சலூன்களில் ஜன.1 முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. TN பாரம்பரிய மருத்துவர் சமூகம், முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், விலைவாசி உயர்வு காரணமாக முடி திருத்தும் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, குறைந்த பட்சமாக AC இல்லாத கடைகளில் கட்டிங் ₹120, சேவிங் 60, AC உள்ள கடைகளில் கட்டிங் ₹130, சேவிங் ₹70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2026
இனி RTI-ல் பொதுத்தேர்வு விடைத்தாளை பெறலாம்!

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள் நகல்களை RTI-ன் கீழ் விண்ணப்பித்து பெறலாம் என மாநில தகவல் ஆணையம் (SIC) தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த SIC, RTI கட்டண விதிகளின்படி பக்கத்திற்கு ₹2 செலுத்தி விடைத்தாள் நகல்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. விடைத்தாள் பராமரிக்கப்படும் அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்றுக்கொள்ளலாமாம்.
News March 13, 2026
ஈரானின் அணு விஞ்ஞானியை கொன்றுவிட்டோம்: இஸ்ரேல்

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி ஒருவரை கொன்றுவிட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது ஈரானின் அணு ஆயுத திட்டத்தையும் பலவீனமாக்கியுள்ளதாகவும், ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு குறிப்பிடத்தக்க அடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார். மேலும், இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News March 13, 2026
கூட்டணிக்குள் செல்கிறாரா விஜய்?

வரும் தேர்தலில் தவெக தனித்து களம் காணும் என ஆதவ், CTR நிர்மல் குமார் உள்ளிட்டோா் கூறி வந்தனர். இந்நிலையில், புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தவெகவின் மா.செ.,க்கள் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் தனித்து களம் காணலாமா, கூட்டணியில் சேரலாமா என ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதில் தவெகவுக்கு தகுந்த அங்கீகாரம் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி சேர பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்த தகவல் வெளியாகியுள்ளது.


