News October 24, 2024
விஜய் மாநாட்டில் இரு பெண் ஆளுமைகளின் கட் அவுட்!

விஜய்யின் தவெக மாநாடு நடைபெறும் இடத்தில் பெரியார், அம்பேத்கர், காமராஜரின் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் திராவிட, தலித்திய பாதையில் விஜய் செல்வார் என அனுமானிக்க முடிகிறது. இந்நிலையில், சுதந்திரப் போராட்ட பெண் ஆளுமைகளான வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாளின் கட் அவுட்டுகள், மாநாட்டில் வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 22, 2026
வைத்திலிங்கம் திமுகவிற்கு வந்தது ஏன்? திருச்சி சிவா

வைத்திலிங்கம் திமுகவிற்கு வந்ததை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என திருச்சி சிவா கூறியுள்ளார். மேலும், CM ஸ்டாலின் மீதும், அவரது ஆட்சித்திறன், செயல்பாடு மீதும் நம்பிக்கை வைத்து திமுகவை நாடி வைத்திலிங்கம் வந்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசுகையில், எங்கள் உறவு மிக சிறப்பாக இருக்கிறது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் எனவும் அவர் பேசியுள்ளார்.
News January 22, 2026
ஒரு மேட்ச்.. வரிசைக்கட்டிய ரெக்கார்டுகள்!

முதல் T20I-ல் 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் அணியாக மட்டுமின்றி கேப்டன் சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா ஆகியோர் பல ரெக்கார்டுகளை படைத்துள்ளனர். அவை என்னென்ன என்று அறிய மேலே உள்ள போட்டோவை இடது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். இந்த தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றும் என நினைக்கிறீங்களா?
News January 22, 2026
கரூர் வழக்கில் அடுத்த அதிரடிக்கு தயாராகும் CBI

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக SC-ல் அடுத்த ஓரிரு தினங்களில் சிபிஐ தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. SC உத்தரவுப்படி வழக்கை கையிலெடுத்த சிபிஐ அதிகாரிகள், கரூர் கலெக்டர் முதல் தவெக தலைவர் விஜய் வரை என பலரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் வரும் பிப். 3-ம் தேதி SC-ல் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், அதற்கு முன்னதாக வழக்கின் ஆதாரங்களை சிபிஐ அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளது.


