News April 28, 2024
‘தமிழகத்தின் சாபக்கேடு’

போதைப்பொருட்கள் நடமாட்டத்தில் ஆளுங்கட்சியின் தலையீடு இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்த அறிக்கை வெளியிட்ட அவர், இபிஎஸ் ஆட்சியில் குட்கா நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறிய ஸ்டாலின், சட்டசபைக்கே குட்காவை எடுத்துச் சென்று குற்றம் சாட்டியவர். ஆனால், அவர் முதல்வரான பின், அதைத் தடுக்கவோ ஒலிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 5, 2026
தவெகவுடன் கூட்டணி அமைக்கும் சசிகலா?

அதிமுகவில் சசிகலாவை இணைக்க வாய்ப்பே இல்லை என EPS கூறிவிட்டார். இந்நிலையில், சசிகலா தனது ஆதரவாளர்களை கொண்டு தனிக் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. எதிர்வரும் பேரவை தேர்தலில் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும் சசிகலா திட்டமிட்டிருப்பதாகவும் பேசப்படுகிறது.
News February 5, 2026
பெயரை மாற்றினால் சாதிய பாகுபாடு மறையுமா? மதுரை HC

மக்களின் மனதில் உள்ள சாதியப் பாகுபாட்டை மாற்ற முயல வேண்டும் என மதுரை HC தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கில், தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதால் மாற்றம் கொண்டுவர முடியாது என்றும் கூறியுள்ளது. இதற்கு அரசு தரப்பில் மாற்றம் கொண்டு வருவதற்காகவே, முதற்கட்டமாக பெயர்களை மாற்றும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்களின் மனதில் மாற்றம் வரும் என தெரிவிக்கப்பட்டது.
News February 5, 2026
அரசு கல்லூரிகளில் 426 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

TN-ல் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 426 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி, நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ள நபர்கள் <


