News November 30, 2024
மக்களை காக்கவே கரண்ட் கட்: SB விளக்கம்

மக்கள் பாதுகாப்புக்காகவே சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த அவர், புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மின்சார வாரியம் எடுத்துள்ளது என்றார். மேலும், பிரச்னைகளை உடனுக்குடன் சரிசெய்ய 10,000 பேர் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News January 19, 2026
பராசக்தி படம் பார்த்தபின் சீமான் வேண்டுகோள்!

பராசக்தி படம் தான் நம் மொழிப்போராட்ட வரலாறு என ஒப்பிட்டு பேசாதீர்கள் என சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். உண்மையான மொழி போராட்டத்தை எடுத்தால், அப்படம் ரிலீஸே ஆகாது என்றும், அந்த ஜன நாயகம் நம் நாட்டில் இல்லை. ஜன நாயகன் படும்பாடே அதற்கு உதாரணம் எனவும் விமர்சித்துள்ளார். மேலும், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வாவின் பங்களிப்பும், GV பிரகாஷின் பின்னணி இசையும் நேர்த்தியாக இருந்ததாக பாராட்டியுள்ளார்.
News January 19, 2026
பாஜக தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்? தமிழிசை

தமிழுக்கு எதிரான கட்சி என விமர்சிப்பவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக தேர்தல் அறிக்கை இருக்கும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தமிழக பாஜக <<18891828>>தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு <<>>தலைவராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அடித்தட்டு மக்களுக்கு முழுமையான வளர்ச்சியை வழங்கும் விதமாகவும், கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற கூடியதாகவும் பாஜக தேர்தல் அறிக்கை இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
News January 19, 2026
ராசி பலன்கள் (19.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


