News August 26, 2024
Current Affairs: கேள்விகளுக்கு பதிலளியுங்கள்

1. இஸ்ரோவின் உள்நாட்டு தயாரிப்பான ஹைபிரீட் ராக்கெட் ‘ரூமி-1’ எந்த மாநிலத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது? 2. இந்தியாவின் முதல் பெண் கார் ரேஸிங் சாம்பியன் யார்? 3.கல்லீரலை பாதிக்கும் Hepatitis A எந்த வகை தொற்றுக்கிருமியால் ஏற்படுகிறது? 4.சமூக, அரசியல் & சூழலியல் மாற்றம் ஆப்பிரிக்காவில் எந்த
விலங்கு இனத்தை அழிவின் விளிம்பில் தள்ளியுள்ளது? விடைகளை கமெண்ட் பண்ணுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
Similar News
News August 31, 2025
நாளை முதல் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம்.. அரசு அறிவிப்பு

TASMAC கடைகளில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமலுக்கு வருகிறது. அதன்படி, பாட்டிலுக்கு ₹10 கூடுதலாக பெற்று, பாட்டிலை திருப்பி தரும்போது ₹10 ஒப்படைக்கப்படும். நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கெனவே இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இந்த திட்டம் சிவகங்கை, மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டம் பற்றி உங்கள் கருத்தென்ன?
News August 31, 2025
பிரிக்ஸ் நாடுகளை மிரட்டிய டிரம்ப்.. புடின் எடுத்த முடிவு

பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சியை தடுக்க அமெரிக்கா பாரபட்சமாக செயல்படுவதாக புடின் விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் பொதுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% வரிவிதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். ரஷ்யா, சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ளன.
News August 31, 2025
SPACE: விண்வெளியில் கத்தினால் கேட்குமா?

ஒரு மலையிலிருந்து கத்தினால், அந்த ஒலி Echo அடிப்பதை நாம் படத்தில் பார்த்திருக்கிறோம். அதேபோல விண்வெளியில் கத்தினால் அந்த ஒலி கேட்குமா என்றால், இல்லை என்கிறது அறிவியல். ஓசையை கடத்துவதில் காற்று இன்றியமையாததாக இருக்கிறது. விண்வெளியில் காற்று இல்லை என்பதால் இங்கு கத்தினால் கேட்காதாம். இதனால் தான், பெரிய பெரிய நட்சத்திர வெடிப்பு ஏற்பட்டால் கூட அங்கு ஓசை கேட்காது என சொல்கின்றனர். SHARE.