News March 31, 2024
CUET-UG விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலை., மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப் படிப்பிற்கான CUET-UG 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிப்பதாக NTA அறிவித்துள்ளது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9.50 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. CUET-UG 2024 தேர்வு மே 15 முதல் 31 வரை தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும்.
Similar News
News January 2, 2026
அடுத்தடுத்து திமுக இளைஞர் அணி மாநாடுகள்

கடந்த டிச.14-ல் திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல மாநாடு தி.மலையில் நடைபெற்றது. இந்நிலையில், ஜன.24-ல் விருதுநகரில் இளைஞர் அணியின் தென் மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. இதனையடுத்து, மத்திய, மேற்கு மண்டல இளைஞர் அணி மாநாடுகளை ஒரே கட்டமாக பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞரணிக்கு கூடுதல் சீட்களை கேட்டுப்பெற, அடுத்தடுத்து இளைஞர் அணி மாநாடுகள் நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
News January 2, 2026
BREAKING: அதிகாலையில் மீனவர்கள் அதிரடி கைது

தமிழக மீனவர்களை மீண்டும் அத்துமீறி இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 தமிழர்களை கைது செய்ததோடு, படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
News January 2, 2026
இந்திய அணியில் என்ன மாற்றம் செய்யலாம்?

வரும் ஜனவரி 31-ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட T20I WC-க்கான அணியில் மாற்றங்கள் செய்யலாம் என ICC தெரிவித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி வலுவாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தாலும், இவருக்கு பதில் இவரை கொண்டுவரலாமே என்ற சில விமர்சனங்களும் உள்ளது. இந்திய அணியில் ஏதாவது மாற்றம் செய்யலாமா அல்லது இந்த அணியே பந்தயம் அடிக்கும் என நினைக்கிறீங்களா?


