News May 15, 2024
CUET தேர்வுகள் தொடங்கியது

மத்திய பல்கலைக்கழகங்களில், இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான CUET நுழைவுத் தோ்வு இன்று தொடங்கியது. நாடு முழுவதும் 380 நகரங்களிலும், வெளிநாடுகளில் 26 இடங்களிலும் நடைபெறும் இத்தேர்வுக்கு, 13 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுகள் ஒரே நாளில் காலை 10-11, மதியம் 12.15-1, 3-3.45 என 3 பகுதிகளாக கணினி அடிப்படையில் மற்றும் நேரடி எழுத்துத் தோ்வு முறைகளில் நடைபெறுகிறது.
Similar News
News March 22, 2026
திருவண்ணாமலை கோயிலில் சிலிண்டர் தட்டுபாடு

அண்ணாமலையார் கோயிலில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் பிரசாதங்களை நிறுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இங்கு தினமும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கோயில் நிர்வாகம் சார்பில் விற்பனைக்காக தயார் செய்யப்படும் பிரசாதங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
News March 22, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 640 ▶குறள்: முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர். ▶பொருள்: முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.
News March 22, 2026
நள்ளிரவில் பசி எடுக்குதா?

இரவு உணவு உண்ட பிறகும் நள்ளிரவில் பசி எடுக்கிறதா? அந்த நேரத்தில் பாஸ்ட் புட்களை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்ள வேண்டும். நள்ளிரவு பசியைக் கட்டுப்படுத்த நிபுணர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இரவு உணவில் பருப்பு, முட்டை, பனீர், கோதுமை ஆகியவற்றை சேர்ந்துகொண்டால் வயிறு நிறைந்துவிடும் என்றும் நாள் முழுவதும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் எனவும் கூறுகின்றனர்.


