News February 28, 2025
CUET நுழைவுத்தேர்வு: அட்டவணை வெளியீடு

மத்திய பல்கலை.களில் PG படிப்புகளில் சேர்வதற்கான CUET நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் 13 முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை முதுநிலை படிப்புகளுக்கான CUET தேர்வு கணினி வழியில் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஹால்டிக்கெட் உள்ளிட்ட விவரங்களை www.nta.ac.in என்ற தளத்தில் தெரிந்து கொள்ளலாம். SHARE IT.
Similar News
News February 28, 2025
ஆப்கனா? ஆஸி.யா? யுத்தம் ஆரம்பம்

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லாகூரிலுள்ள மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற AFG அணி கேப்டன் ஷாஹிதி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
News February 28, 2025
தமிழ் சமஸ்கிருதத்தில் இருந்து கடன் வாங்கியது: சு.சாமி

சமஸ்கிருதத்தில் இருந்து கடன் பெறப்பட்ட 40% சொற்கள் தமிழில் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். இதற்கு நல்ல உதாரணம் துர்கா ஸ்டாலினும், கருணாநிதி என்ற பெயர்கள்தான் என்றும், ஹிந்தியை எதிர்க்கும் திமுகவின் மனநிலையை கற்பனை செய்து பாருங்கள் எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், ஒரு தமிழனாக சமஸ்கிருத ஹிந்தியை கற்க விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
News February 28, 2025
ஜெயப்பிரதாவின் அண்ணன் காலமானார்!

பிரபல நடிகையும், ராஜ்யசபா முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதாவின் அண்ணன் ராஜா பாபு நேற்று மதியம் 3:26 மணிக்கு மரணமடைந்துள்ளார். இது குறித்த பதிவை வெளியிட்ட ஜெயப்பிரதா, ‘அவரை உங்களின் பிரார்த்தனைகளில் வைத்து கொள்ளுங்கள்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார். பெரிதும் பிரபலமில்லை என்றாலும் ராஜா பாபு, தனது சகோதரியின் திரை வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது.