News March 26, 2024
CUET 2024: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். மாணவர்கள் இன்றிரவு 11.50 வரை விண்ணப்பிக்கலாம். மத்திய பல்கலைக்கழகங்கள், அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர CUET பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேர்வு மே 15 – 31வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு exams.nta.ac.in என்ற இணையதளத்தை காணலாம்.
Similar News
News April 19, 2025
MBBS தமிழில் படிக்க நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை 5 ஆண்டுகளும் தமிழில் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதே சமயம் இதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதால், அது குறித்து தேசிய மருத்துவ கவுன்சிலுடன் ஆலோசிக்கப்படும் எனவும் கூறினார். தமிழகத்தில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
News April 19, 2025
அதிமுகவில் இணைந்த தவெக மாவட்ட பொறுப்பாளர்!

TVK ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் முள்ளிமுனை P.P.ராஜா அதிமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்களுடன் அதிமுக மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதனை, ADMK IT விங் பதிவிட்டுள்ளது. விஜய் கட்சி தொடங்கி இன்னும் தேர்தலையே சந்திக்காத நிலையில், அவரது கட்சியிலிருந்து சிலர் விலகுவதும், கட்சிப் பொறுப்புக்கு பணம் வாங்குவதாக புகார் கூறுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
News April 19, 2025
எங்களுக்கு வேற வழி தெரியல: டிரம்ப்

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை நிறுத்த டிரம்ப் முயன்று வருகிறார். இரு தரப்பிடமும் 87 நாட்களாக தொடர்ந்து பேசி வருகிறார். இந்தச் சூழலில் இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒத்துவரவில்லை என்றால், தங்களால் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். போர் நிறுத்த முயற்சியை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை என பெரிய குண்டை தூக்கி போட்டிருக்கிறார் டிரம்ப்.