News December 16, 2025
‘CUET’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

CUET (Common University Entrance Test) PG நுழைவுத் தேர்வின் விண்ணப்ப பதிவு வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 14, 2026 வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். படிவத்தை பெற <
Similar News
News December 18, 2025
ஜி.கே.மணிக்கு பாமக நோட்டீஸ்!

ஜி.கே.மணி, பாமகவுக்கு எதிராகவும், கட்சி தலைமைக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது. மேலும், தலைவர் அன்புமணி மீது அவதூறு பரப்பும் வகையில் பேட்டியளித்த ஜி.கே.மணி விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தை ஒருவாரத்திற்குள் அளிக்கும்படியும் குறிப்பிட்டுள்ளது.
News December 18, 2025
திமுக ஒரு தீய சக்தி.. தவெக ஒரு தூய சக்தி: விஜய்

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையை பேசி திமுகவை காலி செய்தார்கள் என விஜய் கூறியுள்ளார். திமுகவை கடுமையாக சாடுவதற்கு அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளை தானும் பயன்படுத்துவேன் எனக் குறிப்பிட்ட விஜய், திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி என்று முழக்கமிட்டார். மேலும், திமுக எனும் தீய சக்தியை ஒழிக்க வந்திருக்கும் தூய சக்தி தான் TVK என்றும் அவர் தெரிவித்தார்.
News December 18, 2025
காலேஜ் ஃபீஸுக்கு கட்ட உதவும் PM Scholarship

PM YASASVI Post-matric Scholarship திட்டத்தின் கீழ் BC, OBC, DNT மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹13,000 உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இதை பெறுவோர் ➡அரசு or அரசு உதவிபெறும் கலை & அறிவியல் கல்லூரியில் UG 3-ம் ஆண்டு படிக்க வேண்டும் ➡குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹2,50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். வரும் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எனவே, அதிகளவில் ஷேர் பண்ணுங்க.


