News September 13, 2024
கடலூரில் குரூப்-2 தேர்வு: ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் நாளை (14-ம் தேதி) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடக்கும் தேர்வுக்கு, தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வுக் கூட ஹால் டிக்கெட் உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்திற்குள் வரவேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News January 10, 2026
கடலூர்: பணிச்சுமையால் கோர்ட் ஊழியர் தற்கொலை

சிதம்பரம் பள்ளிப்படையை சேர்ந்தவர் பழனிவேல் மனைவி சரிதா (46). இவர் பரங்கிப்பேட்டையில் உள்ள கோர்ட்டில் ஆவண எழுத்தராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சரிதா பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை சரிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
News January 10, 2026
கடலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

இளைய தலைமுறையினரின் உடற்கல்வி மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் கடலூர் மாவட்டத்தில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் 16 – 35 வயதுடைய, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in அல்லது www.cmyouthfestival.sdat.in வாயிலாக வரும் ஜன.21-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News January 10, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.09) இரவு 10 முதல் இன்று (ஜன.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


