News March 17, 2024
கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 17ம் தேதி இரவு கடலூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் இளவழகி , விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் முருகன், நெய்வேலி காவல் ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பாக்யராஜ் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 21, 2026
கடலூர்: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

கடலூர் மாவட்டம் திருமாந்துறை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ராமநத்தத்தில் தொழுதுரை சேர்ந்த பிரவீன்(26) என்பவரிடம், கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பறித்த வழக்கில், ராமநத்தம் போலீசார் வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையில் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
News January 21, 2026
கடலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

கடலூர் மாவட்டம் கோரணப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.22) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனன் காரணமாக கோரணப்பட்டு, அம்பலவாணன்பேட்டை, வழுதலம்பட்டு, தெற்கு வழுதலம்பட்டு, புலியூர், சமட்டிக்குப்பம், திரட்டிக்குப்பம், புலியூர் காட்டுசாகை, கிருஷ்ணங்குப்பம், சந்தப்பேட்டை பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுமென குறிஞ்சிப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தார்.
News January 21, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.20) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


