News October 24, 2024
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள்/ நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், 3.12.2024 அன்று அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படவுள்ளது. இதற்கு https://awards.tn.gov.in என்ற வலைதளத்தில் 28.10.2024 அன்று பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News September 16, 2025
கடலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விவரங்கள்

பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை விரைந்து வழங்கிடும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் இன்று (செப்.16) கடலூர் மாநகராட்சி வண்டிப்பாளையம் ரோடு செங்குந்தர் மண்டபம், திட்டக்குடி நகராட்சி அலுவலக வளாகம், மேல்பட்டாம்பாக்கம் வசந்தம் மஹால், வடக்கு வெள்ளூர் ஊராட்சி மன்ற கட்டிடம், பூதங்கேணி ஜே.ஏ மஹால் ஆகிய இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.
News September 16, 2025
கடலூர்: மாணவி தூக்கிட்டு தற்கொலை

சிதம்பரம் அடுத்த பழையநல்லூரை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (17). தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் ஸ்ரீதேவி, கல்லூரிக்கு செல்ல பிடிக்கவில்லை என்றும், வேறு கல்லூரியில் சேர்க்கும்படி பெற்றோரிடம் கூறினார். அதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த ஸ்ரீதேவி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News September 16, 2025
கடலூர் அருகே பெண் போலீஸ் மீது தாக்குதல்

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஆதிவராகநல்லூரை சேர்ந்தவர் ராஜ்மோகன் மனைவி கவிதா (39). ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் கவிதா நேற்று தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால் (36) என்பவர் முன்விரோதம் காரணமாக கவிதாவை அசிங்கமாக திட்டி தாக்கினார். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜகோபாலை கைது செய்தனர்.