News September 28, 2024
கடலூர்: பேரிடர் எச்சரிக்கை செயலி அறிமுகம்

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் பேரிடர் குறித்த உடனடி எச்சரிக்கைகளை கைபேசி மூலம் எளிதில் அறிந்து கொள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் TN-ALERT என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், இந்தச் செயலியினை தங்களது கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News December 8, 2025
கடலூர்: 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; சிறுவன் கைது

விருத்தாசலத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனைக்கு அவரது பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் AWPS போலீசார் சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது பிளஸ்-2 மாணவனை கைது செய்து, கடலூர் சீர்திருத்தப் பள்ளியில் நேற்று அடைத்தனர்.
News December 8, 2025
கடலூர்: பள்ளி மாணவி தற்கொலை

ராமாபுரத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் மகள் தேவிகா (17). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஞானசேகரன் தன் மனைவியுடன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தேவிகா தூக்கில் சடலாக தொங்கியதை கண்டு, அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 8, 2025
கடலூர்: 56,000 பேருக்கு கால்நடை பராமரிப்பு கடன்

தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்காக கிசான் அட்டை மூலம் கறவை மாடுகள், ஆடுகள் போன்றவற்றை வாங்கவும், பராமரிப்பு செலவுகளுக்கும் வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை நான்கரை ஆண்டுகளில், கடலூர் மாவட்டத்தில் 56 ஆயிரத்து 674 பேருக்கு ரூ.220.61 கோடி மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


