News September 9, 2024
கடலூர்: அங்கன்வாடிகளை தரம் உயர்த்த ரூ.1½ கோடி ஒதுக்கீடு

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் கீழ் அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் கடலூர் மாவட்டத்தில் 2023 அங்கன்வாடி மையங்கள் உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 140 அங்கன்வாடி மையங்களை நவீன முறையில் தரம் உயர்த்த ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
Similar News
News September 10, 2025
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணி ஆய்வு

கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் மாவட்டம் நாணமேடு பகுதியில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, தென்பெண்ணை ஆற்றின் கரைகள் பலப்படுத்துவது குறித்து இன்று (செப்டம்பர் 10) புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News September 10, 2025
கடலூரில் எஸ்பி தலைமையில் பெட்டிஷன் மேளா

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் இன்று (10.9.2025) கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என கூறினார்.
News September 10, 2025
ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில், கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கிட முகாம் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று (10.09.2025) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் உள்ளார்.