News April 8, 2024
CTET விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்

2024 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (CTET) விண்ணப்பங்களில், இன்று முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை தங்கள் விவரங்களை சரிபார்த்து திருத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை, ctet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று மாற்றிக் கொள்ளலாம். ஜூலை 7ஆம் தேதி ஆன்லைன் மற்றும் ஆப்ஃலைன் முறையில் தேர்வுகள் நடைபெறும்.
Similar News
News August 12, 2025
பெண் அரசியல் தலைவர் சுஜாதா காலமானார்

திருச்சி EX மேயரும், காங்., பெண் தலைவர்களில் ஒருவருமான சுஜாதா மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், மாநில துணைத் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 2022-ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று மாமன்ற உறுப்பினராக தேர்வான சுஜாதாவை மீண்டும் மேயராக்க வேண்டும் என ஸ்டாலினை நேரடியாக சந்தித்து ப.சி., வலியுறுத்தும் அளவுக்கு திருச்சி முகமாக இருந்தவர்.
News August 12, 2025
ஆசிரியர் தகுதித்தேர்வு தேதியை மாற்ற EPS வலியுறுத்தல்

கல்லறைத் திருநாளன்று <<17372693>>ஆசிரியர் தகுதித் தேர்வு <<>>நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு EPS கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வரை போலவே மக்கள் உணர்வுகளை அறியாமல் அலட்சியமாக திமுக அரசு செயல்படுவதாக சாடியுள்ளார். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
News August 12, 2025
வீட்டுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கிய CM

வீட்டுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் பயனாளிகளின் வீட்டுக்கே சென்று ஸ்டாலின் பொருள்களை வழங்கினார். இந்த திட்டத்தின் மூலம் 21.70 லட்சம் முதியோர், மாற்றுதிறனாளிகள் பயன்பெற உள்ளனர். இதனை ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைமுறைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.