News March 1, 2025
CT அரையிறுதி: இந்தியா எந்த அணியுடன் மோதல்?

சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வென்றால், முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை துபாயில் வருகிற 4ஆம் தேதி எதிர்கொள்ளும். 2ஆவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணியை நியூசிலாந்து எதிர்கொள்ளும். நியூசிலாந்திடம் நாளை இந்தியா தோற்றால், 4ஆம் தேதி தெ.ஆப்பிரிக்க அணியுடன் அரையிறுதியில் மோதும். 5ஆம் தேதி ஆஸி., நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடும்.
Similar News
News March 3, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச்.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 3, 2025
மாணவர்களுக்கு முதல்வர் சொல்லும் அறிவுரை

நாளை +1, +2 பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. இதையொட்டி மாணவர்களுக்கு வாழ்த்து சொல்லியுள்ள முதல்வர் ஸ்டாலின், இப்பொதுத்தேர்வுகள் உங்களது உயர்க்கல்விக்கும். வாழ்க்கைக்கும் மிக முக்கியமான அடித்தளமாகும். நீங்கள் தேர்வினை மன அமைதியுடன், தன்னம்பிக்கையுடன் எழுத வேண்டும் என்றார். மேலும், நீங்கள் இதுவரை செய்த முயற்சிகள், உங்கள் தேர்வில் நல்ல முடிவுகளைத் தரும். என்றும் வாழ்த்தியுள்ளார்.
News March 3, 2025
அநாகரிக அரசியல் செய்யாதீங்க வன்னி அரசு

இஸ்லாமியர்கள் அச்சுறுத்தல் என காரணம் காட்டி விஜய் பாதுகாப்பு பெற்றதாக வன்னி அரசு பேச்சுக்கு தவெக கண்டனம் தெரிவித்துள்ளது. அறமற்ற பொய்யை வன்னி அரசு பேசியுள்ளார். சிஏஏ சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நிற்கும் விஜய், கட்சியின் பல முக்கிய பொறுப்புகளில் இஸ்லாமிய உறவுகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளார். அநாகரிக அரசியலை விட்டுவிட்டு, நாகரிக அரசியல் பாதையில் பயணம் செய்யுங்கள் என சாடியுள்ளது.