News March 10, 2025

CT: அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்

image

CTல் அதிக ரன்கள் குவித்த நியூசி., வீரர் ரச்சின் ரவீந்திரன் (263) போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து IND வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் (243), பென் டக்கெட் (227), ஜோ ரூட் (225) ஆகியோர் அடுத்தடுத்து இடம்பிடித்துள்ளனர். நியூசி., பந்துவீச்சாளர் ஹென்றி (10W), வருண் சக்ரவர்த்தி (9), சான்ட்னர் (9), ஷமி (9), பிரேஸ்வெல் (8) ஆகியோர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Similar News

News March 10, 2025

‘நீட்’ விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்

image

UG ‘நீட்’ தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நாளையுடன் (மார்ச் 11) அவகாசம் நிறைவடைகிறது. கடந்த 07.02.2025 முதல் 07.03.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் மே 4ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ள நிலையில், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

News March 10, 2025

இசை ‘ராஜா’வை வரவேற்க ரெடியாகும் தமிழ்நாடு!

image

லண்டனில் தனது முதல் சிம்பொனியான ‘VALIANT’யை அரங்கேற்றம் செய்து, இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த இசைஞானி இளையராஜா இன்று சென்னை திரும்புகிறார். அவரை சிறப்பான முறையில் வரவேற்க தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசைஞானி மீனம்பாக்கம் வந்திறங்கியதும், அதிகாரிகள் புடைசூழ அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்கவுள்ளார். தவிர, ரசிகர்களும் அவருக்காக ஏர்போர்ட்டில் காத்திருப்பார்கள்.

News March 10, 2025

ரன்வேயில் உரசிய விமானம்.. சென்னை ஏர்போர்ட்டில் ஷாக்

image

சென்னை வந்திறங்கிய விமானத்தில் இருந்த பயணிகளுக்கு உயிர் பயம் ஏற்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. மும்பையில் இருந்து 192 பேருடன் வந்த விமானம், லேண்ட் ஆனபோது ஓடுபாதையில் அதன் வால் உரசியிருக்கிறது. தீப்பொறி எழும்ப, பைலட் சட்டென சுதாரித்து விமானத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமான பாதுகாப்பு ஆணையம் விசாரிக்கிறது. பயணிகளிடமும் Sorry கேட்டுள்ளனர்.

error: Content is protected !!