News February 17, 2025
CT: பாக். மைதானத்தில் இந்திய தேசியக் கொடி இல்லை

சாம்பியன்ஸ் டிராபி போட்டி 2 நாள்களில், கராச்சியில் தொடங்கவுள்ளது. இதையொட்டி, அப்போட்டிகளில் பங்குபெறும் நாடுகளின் தேசியக் கொடி கம்பங்களில் பறக்கவிடப்பட்டு உள்ளன. ஆனால் இந்திய தேசியக் கொடி மட்டும் பறக்கவிடப்படவில்லை. பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாததே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
Similar News
News January 1, 2026
ஊட்டியே ஸ்தம்பித்தது

ஊட்டிக்கு வார விடுமுறை நாட்களில், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகளின் வருகை தருவது வழக்கம். தற்போது, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை மற்றும் ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக, நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை ஊட்டி நகரில் அதிகரித்தது. இதனால், பல்வேறு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
News January 1, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு.. முதல் நாளே வந்த அறிவிப்பு

ஒவ்வொரு மாதமும் ‘தாயுமானவர்’ திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், இம்மாதம் ரேஷன் பொருள்கள் வீடு தேதி வரும் தேதி வெளியாகியுள்ளது. ஆம்! ஜன.4, 5-ல் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதை முதல் மாவட்டமாக திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 1, 2026
முட்டைகோஸால் மரணமா?

உபி.,யில் தீராத தலைவலியால் அவதியுற்று வந்த 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். அவருக்கு MRI ஸ்கேன் பரிசோதனையில் மூளையில் 8 கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஆபரேஷன் செய்தபோது பலியாகியுள்ளார். இதுகுறித்து சிகிச்சை அளித்த டாக்டர்கள், மாணவி சாப்பிட்ட உணவு வழியே முட்டைக்கோஸில் காணப்படும் ஒருவகையான ஒட்டுண்ணி மூளைக்குள் நுழைந்து, இந்த கட்டிகள் ஏற்பட்டிருக்கலாம் என்று விளக்கமளித்துள்ளனர்.


