News March 7, 2025
CT FINAL: நடுவர்கள் அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, AUSஐ சேர்ந்த பால் ரெஃபில் மற்றும் ENGஐ சேர்ந்த ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் கள நடுவர்களாக இருப்பர். இலங்கைச் சேர்ந்த ரஞ்சன் மதுகல்லே போட்டி நடுவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 3rd Umpire ஆக ஜோயல் வில்சனும், 4th Umpire ஆக குமார் தர்மசேனாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News March 7, 2025
Employee Appreciation Day.. இன்றாவது பாராட்டுங்களேன்!

ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதல் வெள்ளி Employee Appreciation Day, அதாவது ஊழியர்கள் பாராட்டு நாளாக கொண்டாடப்படுகிறது. கம்பெனிக்காக கடினமாக உழைக்கும் பெஸ்ட் ஊழியர்களை இன்று மனதார பாராட்டுங்களேன் சீனியர்ஸ்! சம்பள உயர்வு போலவே, பாராட்டும் ஒருவனை கடினமாக உழைக்கத் தூண்டும். Increment தான் வருஷத்துக்கு ஒரு வாட்டி தர்றீங்க, பாராட்டவாவது செய்யுங்களேன் ஆபீசில் நீங்க வாங்குன பெஸ்ட் பாராட்டு எது?
News March 7, 2025
அதிமுகவில் இருந்து EX எம்எல்ஏ விஜயகுமார் நீக்கம்

EX எம்எல்ஏ விஜயகுமாரை அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கியுள்ளார். கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாகவும், ஆதலால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுவதாகவும் இபிஎஸ் அறிவித்துள்ளார். பாஜகவின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தில் விஜயகுமார் கையெழுத்திட்டதால், நீக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
News March 7, 2025
தங்கக் கடத்தல்: நடிகை ஒப்புதல்

துபாயில் இருந்து 17 தங்கக்கட்டிகளை கடத்தி வந்ததை நடிகை ரன்யா ராவ் ஒப்புக் கொண்டுள்ளார். ரூ.12.56 கோடி மதிப்பு 14.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததாக, அண்மையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர், தங்கக்கட்டிகளை தாம் உடலில் மறைத்து கடத்தி வந்ததாக கூறியுள்ளார். கடத்தலுக்காக மூத்த காவல்துறை அதிகாரி ராமசந்திர ராவின் உறவினர் என்ற அடையாளத்தை பயன்படுத்தியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.