News February 23, 2025
CT 2025: பென் டக்கெட் புதிய சாதனை

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் புதிய சாதனை படைத்துள்ளார். ஆஸி., அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 165 ரன்கள் குவித்த அவர், இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் நாதன் ஆஸ்டில் 145*, மூன்றாவது இடத்தில் ஆண்டி ஃப்ளவர் 145, நான்காவது இடத்தில் கங்குலி 141* உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.
Similar News
News February 23, 2025
அப்பாவான OpenAI CEO சாம்

OpenAI CEO சாம் ஆல்ட்மேனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே பிறந்துள்ளதால், NICUவில் வைத்து பராமரிக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும், இருப்பினும் குழந்தை ஆக்டிவ்வாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார். சாம் தனது நீண்ட நாள் காதலியான ஆலிவரை, கடந்த 2024ல் திருமணம் செய்தார்.
News February 23, 2025
போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்

போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14ஆம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் நேற்று முன்தினம் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
News February 23, 2025
FBI இயக்குநருக்கு தார் கார் கிஃப்ட்?

அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBIன் இயக்குநராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேல் பதவியேற்றுள்ளார். அவரை வாழ்த்தி, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது X பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டார். அதில் கமெண்ட் செய்த பயனர் ஒருவர், படேலுக்கு தார் காரை பரிசளிப்பீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு, காரை கிஃப்ட்டாக பெற தகுதியானவர் தான் படேல் என மஹிந்திரா பதிலளித்துள்ளார்.