News May 17, 2024
CSK-க்கு வாழ்வா சாவா போட்டி

CSK-RCB இடையேயான ஐபிஎல் போட்டி, நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தாலோ அல்லது மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டாலோ, CSK அணி 4ஆவது அணியாக ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதே வேளை, 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவர்களுக்குள் RCB அணி இலக்கை அடைந்தால் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். யார் வெற்றி பெறுவார்?
Similar News
News November 21, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக சரிவைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹40 குறைந்து ₹11,460-க்கும், சவரனுக்கு ₹320 குறைந்து ₹91,680-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் நம்மூர் சந்தையில் 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,120 குறைந்துள்ளது. இதனால், நடுத்தர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
News November 21, 2025
வண்ணங்களின் களஞ்சியம்.. இன்று சர்வதேச டிவி தினம்

இன்று சர்வதேச டிவி தினம் கொண்டாடப்படுகிறது.
வீட்டு ஹாலில் TV வைத்து மாடியில் ஒருவர் ஆன்டெனா திருப்பி கீழே படம் வந்துருச்சா? என கத்தும் குரல்களுக்கு இடையே, அத்திரை மின்னுவது ஒரு மாயாஜாலம். புள்ளியாய் தெரிந்த திரை விலகி, ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியை இமைக்காமல் தெருவே ஒன்று கூடி ரசித்த அந்த தருணங்களால், டிவி ஒரு இயந்திரமாக தெரியவில்லை; அது மகிழ்ச்சியின் சாவியாக இருந்தது. நீங்க டிவி வாங்கிய ஆண்டு?
News November 21, 2025
பட்டாவில் புதிய மாற்றம்.. தமிழக அரசு அறிவித்தது

வில்லங்க சான்று(EC) போல, பட்டாவின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் ‘பட்டா வரலாறு’ என்ற புதிய சேவையை அடுத்த வாரம் TN அரசு செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறது. இதன்மூலம், அந்த நிலத்தின் உரிமையாளர், பட்டா எந்த காலகட்டத்தில் யார் யாருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது உள்ளிட்ட விவரங்களை எளிமையாக அறிய முடியும். <


