News April 26, 2025
16 ஆண்டுகளில் CSK-வின் மோசமான ரெக்கார்ட்!

நடப்பு IPL தொடர் CSK-விற்கு பெரும் சோகமாக மாறியுள்ளது. நேற்றைய தோல்வியுடன் கிட்டத்தட்ட CSK-வின் ப்ளே ஆப் கனவும் கலைந்து விட்டது. 16 ஆண்டுகால CSK வரலாற்றில், தொடர்ச்சியாக 2 முறை ப்ளே ஆப்பிற்கு செல்ல முடியாமல், CSK வெளியேறுவது இதுவே முதல் முறை. இந்த மோசமான தோல்விக்கு என்ன காரணம் என நினைக்குறீங்க?
Similar News
News January 10, 2026
வெனிசுலாவை மீண்டும் தாக்கப் போவதில்லை: டிரம்ப்

வெனிசுலாவில் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதை டிரம்ப் வரவேற்றுள்ளார். மேலும் அந்நாட்டு அரசு அமைதியை நாடுவது தெளிவாகிறதாகவும், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப அமெரிக்காவும் வெனிசுலாவும் இணைந்து செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வெனிசுலாவின் ஒத்துழைப்பு காரணமாக 2-வது சுற்று தாக்குதல்களை தான் ரத்து செய்துள்ளதாகவும், அது அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News January 10, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 576
▶குறள்:
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.
▶பொருள்: ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.
News January 10, 2026
நெதன்யாகுவை US கடத்த வேண்டும்: பாக்., அமைச்சர்

வெனிசுலாவின் முன்னாள் அதிபர் மதுரோவை அமெரிக்கா தனது காவலில் எடுத்தது போல், இஸ்ரேல் PM நெதன்யாகுவையும் கடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா தெரிவித்துள்ளார். மனிதாபிமானத்தில் நம்பிக்கை இருந்தால் US இதைச் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். துருக்கியும் அவரை கடத்த முடியும் என குறிப்பிட்ட அவர், நெதன்யாகுவை விட ஒரு பெரிய குற்றவாளியை உலகம் பார்த்ததில்லை என்றும் சாடினார்.


