News May 7, 2025
ஹோம் கிரவுண்டில் CSK-ன் மோசமான சாதனைகள்

நடப்பு IPL சீசனில் CSK ஹோம் கிரவுண்டான சேப்பாக்கத்தில் மோசமான சாதனைகளைப் படைத்துள்ளது. *முதல்முறையாக தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி. *இந்த சீசனில் மட்டுமே அதிக தோல்விகள் (5). *PBKS உடனான கடந்த 8 ஆட்டங்களில் 7-ல் CSK தோல்வியடைந்துள்ளது. *அதிகபட்சமாக CSK-க்கு எதிராக MI 5 முறை வெற்றி பெற்றுள்ளது.
Similar News
News November 3, 2025
செங்கோட்டை: ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

தென்காசி மாவட்டம், கடையம் மேட்டூர் இடையே திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை நோக்கி வந்த பயணிகள் ரயில் முன்பு சுமார் 3.15 மணியளவில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். என் தொடர்ச்சியாக அந்த பகுதியில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.
News November 3, 2025
பள்ளிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை… எப்படி தெரியுமா?

பள்ளிகளுக்கு வார இறுதி நாள்கள் மூலம் மாதந்தோறும் 8 நாள்கள் விடுமுறை கிடைக்கும். நவம்பரில் கூடுதலாக ஒரு சனி, ஞாயிறு உள்ளதால் 10 நாள்கள் விடுமுறையாகும். சனி, ஞாயிறு (நவ.1, 2) லீவு முடிந்து மாணவர்கள் இன்று பள்ளிக்கு சென்றுள்ளனர். மேலும், நவ. 8, 9, 15, 16, 22, 23, 29, 30-களிலும் லீவுதான். நவ.14 அன்று குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி அளவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும், ஆனால் விடுமுறை கிடையாது.
News November 3, 2025
ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை

நவம்பர் மாதத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் சற்று ஏற்றத்துடன் வர்த்தகமாகியுள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 40 புள்ளிகள் உயர்ந்து 83,978 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 50, 41 புள்ளிகள் உயர்ந்து 25,763 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. மகிந்திரா, டாடா, SBI பங்குகள் ஏற்றம் கண்ட நிலையில், மாருதி சுசூகி, TCS நஷ்டத்தை சந்தித்துள்ளன.


