News April 7, 2025
CSK-வின் அடுத்த ஆட்டம்.. இன்று டிக்கெட் விற்பனை

CSK – KKR அணிகள் வரும் 11-ம் தேதி சேப்பாக்கத்தில் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 09:30 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. கடந்த முறை டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. என்னதான் CSK தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும் நிச்சயம் அதில் இருந்து மீண்டு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நீங்க டிக்கெட் வாங்க ரெடியா?
Similar News
News April 9, 2025
தேர்வு கேள்வித்தாள் திருட்டு.. என்ன தண்டனை தெரியுமா?

மாணவர்களின் கல்வித் திறனை அறியவே பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு தண்டனை அளிக்க அரசு பிஎன்எஸ் சட்டத்தில் வழிவகை செய்துள்ளது. அந்த சட்டத்தின் 4-வது பிரிவில் கேள்வித்தாள் திருட்டு மற்றும் அதை விற்பனை செய்வோருக்கு அபராதத்துடன் குறைந்தபட்சம் 1 ஆண்டு, அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News April 9, 2025
குரு பெயர்ச்சி: ராஜயோகம் பெறும் 4 ராசிகள்

குரு, நாளை (ஏப்.10) மிருகசீரிடம் நட்சத்திரத்துக்கு பெயர்கிறார். இதனால் நன்மைகள் பெறும் 4 ராசிகள்: *சிம்மம்- வெற்றிகள் கிடைக்கும், நிதிநிலை, வியாபாரம் சிறக்கும். பணியில் மேன்மை *துலாம்- தேர்வுகளில் வெற்றி. சம்பளம் உயரலாம். ஏப்.10 முதல் ஜூன் 13-க்குள் நல்ல செய்தி. *தனுசு- குருவின் முழு ஆசி கிடைக்கும், படிப்பு, வேலையில் வெற்றி *கும்பம்- மகிழ்ச்சி, குழந்தை பாக்கியம் கிடைக்கும். பண மழை பொழியும்.
News April 9, 2025
இந்தியாவை விற்றுவிட்டு மோடி சென்றுவிடுவார்: கார்கே

பொதுத்துறை நிறுவனங்களை நண்பர்களுக்கு விற்றுவிட்டு, SC, ST, OBC இடஒதுக்கீட்டை நிறுத்தி, இந்தியாவையே ஒருநாள் விற்றுவிட்டு பிரதமர் மோடி சென்றுவிடுவார் என கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். பணக்காரர்கள் வெளிநாடுகளில் செட்டில் ஆவதாகவும், இளைஞர்கள் வேலைதேடி சட்டவிரோதமாக வெளிநாடு சென்று, அங்கு கைவிலங்கிடப்பட்டு திருப்பி அனுப்பப்படும் போது, மோடி அமைதியாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.