News April 8, 2025

முதலில் பவுலிங் செய்யும் CSK

image

ஐபிஎல் தொடரின் 22ஆவது போட்டியில் இன்று சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். இத்தொடரில் 4 புள்ளிகளுடன் பஞ்சாப் நான்காவது இடத்திலும் 2 புள்ளிகளுடன் சென்னை 9ஆவது இடத்திலும் உள்ளது. எந்த அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது?

Similar News

News April 17, 2025

Pant LSG-ல இருக்காரு.. போட்டோ போட்டு கலாய்த்த 96 நடிகை!

image

வர்ஷா பொல்லம்மா ரீசண்ட் இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகின்றது. கறுப்பு கலர் மினி கவுன் ஒன்றில் க்யூட்டாக சிரித்தபடி போஸ் கொடுத்ததை விட, அந்த போஸ்டுக்கு அவர் கொடுத்திருந்த கேப்ஷன் தான் செம வைரல்.‘Pant எங்கன்னு முட்டாள்தனமா கேக்காதீங்க.. அவர் LSG-ல இருக்காரு’ என வர்ஷா மென்ஷன் பண்ண, நெட்டிசன்கள் சிரித்து வருகின்றனர். ‘96’, ‘பிகில்’ போன்ற தமிழ் படங்களில் வர்ஷா நடித்துள்ளார்.

News April 17, 2025

தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் மரியாதை

image

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டையில் உள்ள தீரன் சின்னமலை சிலையின் கீழுள்ள உருவப் படத்திற்கு மலர் தூவி முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதில், அமைச்சர் முத்துச்சாமி, கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தினர்.

News April 17, 2025

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்.. ₹71,000-ஐ கடந்தது!

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.17) ₹840 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,920-க்கும், சவரன் ₹71,360-க்கும் விற்பனையாகிறது. இது வரலாறு காணாத புதிய உச்சமாகும். அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹110-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,10,000-க்கும் விற்பனையாகிறது.

error: Content is protected !!