News April 25, 2025
CSK vs SRH: பிளே ஆஃப் ரேஸில் நீடிக்கப் போவது யார்?

புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ள CSK, SRH அணிகளுக்கு இனிவரும் அனைத்து போட்டிகளுமே வாழ்வா சாவா ஆட்டம்தான். இரு அணிகளும் இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடி தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளன. இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் இன்றிரவு மல்லுக்கட்ட உள்ளன. இதில், தோல்வி அடையும் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு மங்கும். இன்றைய போட்டியில் CSK ஜெயிக்குமா?
Similar News
News November 27, 2025
பொங்கல் பரிசாக ₹5,000?… ரேஷன் கார்டுக்கு வழங்க திட்டம்

பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு தலா ₹5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொக்கத் தொகையுடன் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்டவை வழங்கவும் அரசு பரிசீலித்து வருகிறதாம். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பரிசுத் தொகை இல்லாமல், பொங்கல் பொருள்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 27, 2025
நவ.29-ல் திமுக MP-க்கள் கூட்டம்

திமுக MP-க்கள் கூட்டம் நவ.29-ம் தேதி நடைபெறும் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார். ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து திமுக MP-க்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், தமிழகத்திற்கான நிதி, மெட்ரோ ரயில் திட்டம், காவிரி விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
News November 27, 2025
உங்க SIR படிவம் அப்லோட் ஆகிடுச்சான்னு செக் பண்ண..

★<


