News April 30, 2025
இன்று CSK vs PBKS.. விசில் பறக்குமா?

ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை, மீதமிருக்கும் 5 போட்டிகளில் வென்று கவுரமாக சீசனை விட்டு வெளியேற முயற்சிக்கும். அதேபோல், 5-வது இடத்தில் உள்ள பஞ்சாப், பிளேஆஃப் செல்ல முயற்சிக்கும். எனவே இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.
Similar News
News January 24, 2026
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று கடலோரம் மற்றும் ஒருசில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், தி.மலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. மேலும், குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என மீனவர்களையும் எச்சரித்துள்ளது.
News January 24, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 24, தை 10 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 PM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சஷ்டி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
News January 24, 2026
வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவதன் நன்மைகள்

காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவது குறையும்.*இதயம், தலைமுடி, சருமம், வயிறு போன்றவற்றிற்கு நன்மை. *செரிமானம் மேம்படும். *சருமம் பொலிவு பெறும். *நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். *ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். *அதிகளவில் இல்லாமல் அளவுடன் சாப்பிடுவது நல்லது.


