News April 2, 2025
CSK vs DC: புக் பண்ண ரெடியா இருங்க மக்களே!

சென்னையில் வரும் 5ஆம் தேதி நடைபெற உள்ள CSK vs DC போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. காலை 10.15 மணி முதல் www.chennaisuperkings.com என்ற இணையதளம் சென்று டிக்கெட்களை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட் விலை ₹1,700 முதல் ₹7,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு 2 டிக்கெட்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 2, 2025
குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு..

குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு டிச.8 முதல் டிச.18 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அழைப்பாணையை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், இதர விவரம் SMS, மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கலந்தாய்வை தவறவிட்டால் மறுவாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
News December 2, 2025
டிசம்பர் 2: வரலாற்றில் இன்று

*1911–தமிழறிஞர் பாண்டித்துரைத் தேவர் மறைந்த நாள். *1912 – திரைப்பட தயாரிப்பாளர் நாகிரெட்டி பிறந்தநாள். *1933–நாடக நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பா மறைந்த நாள். *1960–நடிகை சில்க் ஸ்மிதா பிறந்தநாள். *1963–இ-மெயிலை கண்டுபிடித்த சிவா ஐயாதுரை பிறந்தநாள். *1963–நடிகர் நெப்போலியன் பிறந்தநாள். *1988–பெனசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார். *2016–அரசியல்வாதி கோ.சி.மணி மறைந்த நாள்.
News December 2, 2025
85,000 பேர் தமிழ் பாடத்தில் தோல்வி.. சீமான் காட்டம்

முதுநிலை ஆசிரியர் தேர்வில் 85,000 பேர் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்ததுதான், 60 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தமிழை வளர்த்த முறையா என்று சீமான் விமர்சித்துள்ளார். தேர்வெழுதிய பல இளைஞர்கள் தமிழ் சரிவர தெரியாமலேயே பட்டம் பெற்றது கொடுமை என்றும் அவர் கூறியுள்ளார். இதை சரிசெய்திட பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ்மொழி பாடத்தை கட்டாயம் கற்பித்து, தேர்வு நடத்துவதை அரசு உறுதி செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.


