News April 11, 2025
தோனி தலைமையில் இன்று களம் காணும் CSK

முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கினாலும் அதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் தொடர் தோல்வியை CSK சந்தித்தது. பிளேஆஃப் வாய்ப்பில் நீடிக்க இனி வென்றே தீர வேண்டும் என்ற நிலைக்கு சென்னை வந்துவிட்டது. இன்றைய போட்டியில் KKR-ஐ, சென்னை எதிர்கொள்கிறது. கொல்கத்தா 5 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இன்று வெற்றி தேவை என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.
Similar News
News November 15, 2025
அரசியலை விட்டு விலகுகிறேன்: லாலு மகள் அறிவிப்பு

பிஹார் தேர்தலில் RJD கட்சியின் தோல்வியை அடுத்து, அரசியலில் இருந்து விலகுவதாக லாலு பிரசாத் யாதவின் மகள் ரோஹினி ஆச்சார்யா அறிவித்துள்ளார். இதுகுறித்து X-ல் பதிவிட்டுள்ள அவர், ‘அரசியலில் இருந்து விலகுகிறேன், என் குடும்பத்தையும் துறக்கிறேன். இதைத்தான் சஞ்சய் யாதவும் ரமீஸும் என்னிடம் செய்ய சொன்னார்கள். அனைத்து பழிகளையும் நானே சுமந்து கொள்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 15, 2025
எந்த விலங்கிடம் என்ன கத்துக்கலாம்? PHOTOS

விலங்குகளிடமிருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். அமைதி, பொறுமை, ஒற்றுமை, ஒழுக்கம் போன்ற மதிப்புகள் அவற்றின் நடத்தை மூலம் தெளிவாக வெளிப்படுகின்றன. செயலில் காட்டும் ஆசிரியர்கள் போல, விலங்குகளிடமிருந்து, நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். எந்த விலங்கிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 15, 2025
மாம்பழம் சின்னம்: ராமதாஸ் முக்கிய ஆலோசனை

மாம்பழம் சின்னம் தங்களுக்கானது என்று அன்புமணி தரப்பு ECI-க்கு கடிதம் எழுதியுள்ளது. எனவே, சட்டப் போராட்டத்தை கையிலெடுக்கும் வகையில், பாமக வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை உறுப்பினர்களுடன், ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி அங்கீகாரத்தை பெறுவது, மாம்பழம் சின்னம் ஆகியவற்றிற்காக SC-ஐ நாட இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


