News April 21, 2025

CSK டிக்கெட் விற்பனை மந்தம்… அதிருப்தியில் ரசிகர்கள்

image

வழக்கமாக CSK போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிடும். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தொடர்ந்து தோல்விகளை சென்னை அணி சந்தித்து வருவதால் SRH-க்கு எதிரான போட்டிக்கான டிக்கெட் விற்பனை வழக்கத்துக்கு மாறாக மந்தமாக உள்ளது. டிக்கெட் வாங்க ரசிகர்கள் விரும்பாததை வைத்தே அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது.

Similar News

News December 24, 2025

தவெகவுக்கு முதலிடம் கொடுத்தாரா OPS?

image

தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்திய OPS, 2026 தேர்தல் தொடர்பாக சில கேள்விகள் அடங்கிய படிவத்தை நிர்வாகிகளிடம் வழங்கி கருத்து கேட்டுள்ளார். அதில், யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்ற கேள்விக்கு, முதல் ஆப்ஷனாக தவெக, 2-வதாக திமுக என இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் பிரதான எதிர்க்கட்சியான திமுக பக்கம் போகாமல், விஜய்யுடனே கூட்டணி அமைப்பார் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

News December 24, 2025

பாகிஸ்தானிடம் இந்தியா உதவி கேட்கிறது: ஜாவேத்

image

பாக்.,கில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க சிறந்த திட்டங்களை உருவாக்கி வருவதாக Ex வீரர் ஆகிப் ஜாவேத் கூறியுள்ளார். வெளிநாட்டு வீரர்கள் கூட பாக்., வந்து பயிற்சி எடுத்து செல்வதாக தெரிவித்த அவர், வேகப்பந்து வீச்சில் தங்களுக்கு உதவுமாறு இந்தியாவில் இருந்து கூட அதிக அழைப்புகள் வருகிறது என்றும் கூறினார். இந்தியா – பாக்., இடையே மைதானத்தில் மோதல் உள்ள நிலையில், இந்த கருத்து பேசுபொருளாகியுள்ளது.

News December 24, 2025

டிசம்பர் 24: வரலாற்றில் இன்று

image

*1524 – வாஸ்கோடகாமா நினைவுநாள்.
*1973 – பெரியார் நினைவுநாள்.
*1978 – ரோபோ சங்கர் பிறந்தநாள்.
*1987 – எம்.ஜி.ஆர் நினைவுநாள்.
*1999 – இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 காத்மாண்டு – டெல்லி இடையே கடத்தப்பட்டு ஆப்கனின் கந்தகார் நகரில் தரையிறக்கப்பட்டது.

error: Content is protected !!