News April 9, 2024
CSK அணியின் தளபதி ஜடேஜா

ரவீந்திர ஜடேஜாவை, CSK அணியின் தளபதி என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர். நேற்றைய போட்டியில், சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அத்துடன் 3 கேட்சுகளை பிடித்த அவர், ஐபிஎல்லில் 100 கேட்சுகளை பிடித்த 2ஆவது CSK வீரர் என்ற பெருமையையும் பெற்றார். தோனியை ‘தல’ என்றும், சுரேஷ் ரெய்னாவை ‘சின்ன தல’ என்றும் அழைத்து வந்த ரசிகர்கள், தற்போது ஜடேஜாவை ‘தளபதி’ என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
Similar News
News February 3, 2026
திமுகவை வீழ்த்தும் சக்தி விஜய்க்கு இல்லை: உதயகுமார்

திமுகவை தவெகவால் மட்டுமே வீழ்த்த முடியும் என விஜய் பேசியதற்கு EX அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். திமுகவின் தவறை தட்டி கேட்டு அதை வீழ்த்தும் ஒரே சக்தி அதிமுக மட்டும்தான் என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், தேர்தல் முடிவுக்கு பிறகு யார் களத்தில் உள்ளார்கள்? யார் காணாமல் போனார்கள்? என்று தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
தவெகவில் இணைகிறேனா? ஓபிஎஸ் பதில்

அதிமுகவில் OPS-ஐ சேர்க்கவே முடியாது என EPS கதவை அடைத்துவிட்டார். அதேநேரம், திமுகவில் OPS இணையலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, தவெகவில் இணைவதே OPS-க்கு நல்ல முடிவாக இருக்கும் என சில TVK நிர்வாகிகள் கூறினர். இந்நிலையில், இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு, ‘நீங்கள் தவெக கட்சியா?’ என OPS செய்தியாளர்களிடம் மழுப்பலாக பதிலளித்துள்ளார். இதனால் அவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்ற பேச்சு எழுந்துள்ளது.
News February 3, 2026
காரிய வெற்றியைத் தரும் வேல் வழிபாடு

முருகன் வேலை வழிபட்டால், முருகன் அருளோடு பராசக்தியின் அருளும் கிடைக்குமாம். முருகன் படத்தை துடைத்து, சந்தனம், குங்குமம் வைக்கவும். 1 அல்லது 6 என்ற எண்ணிக்கையில் நெய் தீபம் ஏற்றி வைத்து, நெய்வேத்தியம் படைக்கவும். ‘முருகா’ என்று 108 முறை கூறி முடித்த பிறகு, வேலின் அடியில் 1 சந்தன குங்கும பொட்டு வைக்கவும். தினமும் வேலுக்கு கீழிருந்து மேலாக ‘முருகா’ என 108 முறை கூறி, சந்தன பொட்டு வைத்து வரவும்.


