News March 29, 2025
சேப்பாக்கத்தில் சிஎஸ்கே படுதோல்வி…!

சேப்பாக்கத்தில் CSK அணியை வென்று 17 ஆண்டுகால சோக வரலாற்றுக்கு RCB முடிவு கட்டியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த RCB அணியில், கேப்டன் ரஜத் பட்டிதார் அரைசதம் விளாசினார். 20 ஓவர்களில் அந்த அணி 196 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய CSK அணியில், கேப்டன் ருதுராஜ் டக் அவுட் ஆனார். இறுதிவரை போராடியும் CSK அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. 2008-க்கு பிறகு சேப்பாக்கத்தில் ஆர்சிபி வென்றுள்ளது.
Similar News
News August 24, 2025
‘எஞ்சாமி தந்தானே’… ‘இட்லி கடை’ 2-வது பாடல்

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் 2-வது பாடல் ‘எஞ்சாமி தந்தானே’ விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கிராமிய குத்து பாடலாக எஞ்சாமி தந்தானேவை உருவாக்கியுள்ளார். சிறுவர்களுடன் தனுஷ் குத்தாட்டம் போடும் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸிற்கு ‘இட்லி கடை’ திட்டமிடப்பட்டுள்ளது.
News August 24, 2025
Farewell இன்றி ஜாம்பவான்கள் ஓய்வு

அஸ்வின், கோலியை தொடர்ந்து மற்றொரு இந்திய டெஸ்ட் ஜாம்பவான் புஜாரா Farewell போட்டி இன்றி ஓய்வை அறிவித்துள்ளார். அணியின் எதிர்காலம் கருதி சீனியர் வீரர்களான புஜாரா, ரஹானேவை பிசிசிஐ ஓரங்கட்டியது. இந்த நிலையில் புஜாரா ஓய்வு பெற்றுள்ளார். சமீபத்தில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், கோலி, ரோஹித், புஜாரா ஆகியோரில் ஒருவருக்கு கூட பிசிசிஐ Farewell போட்டி நடத்தவில்லை. பிசிசிஐ அணுகுமுறை சரியானதா ?
News August 24, 2025
இதுக்கு சரியாக பதில் சொல்லுங்க பார்ப்போம்!

அடுத்தடுத்து நியூஸ் படிச்சி டயர்டாகி இருக்கும் உங்களின் மூளையை வாங்க கொஞ்சம் சுறுசுறுப்பாக்குவோம். மேலே உள்ள படத்தில் இருக்கும் கேள்வியை கவனியுங்க. நீங்கள் இந்த நான்கு ‘9’ எண்களுக்கு நடுவே, +, -, × or ÷ என எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம். ஆனால், 100 என்பதை சரியாக நிரூபிக்க வேண்டும். பார்க்க கஷ்டமாக இருந்தாலும், ரொம்ப ஈசி. எத்தனை பேர் கரெக்ட்டா பதில் சொல்றீங்கனு பார்ப்போம்.