News May 13, 2024
மழையால் சிஎஸ்கே – ஆர்சிபிக்கு சிக்கல்?

பெங்களூருவில் மே 18ம் தேதி மழை பெய்ய உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, அன்றைய தினம் பெங்களூருவில் நடைபெற உள்ள சிஎஸ்கே – ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டி பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு, மழையால் போட்டி பாதிக்கப்பட்டால், இரு அணிகளும் பிளேஆஃப் செல்வதில் சிக்கல் ஏற்படலாம்.
Similar News
News November 19, 2025
தஞ்சை: மீண்டும் மழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 19, 2025
வைகுண்ட ஏகாதசிக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்

திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான டிக்கெட்களை ஆன்லைனில் மட்டுமே வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 30 முதல் ஜனவரி 8-ம் தேதி வரை பரமபத வாசல் தரிசனத்திற்கு, நேரடி டோக்கன்கள் வழங்கும் திட்டமில்லை என தேவஸ்தானம் கூறியுள்ளது. குறிப்பாக, டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதிகளில், தரிசனத்திற்கான டிக்கெட்களை குலுக்கல் முறையில் வழங்கவும் தீர்மானித்து உள்ளது.
News November 19, 2025
இந்த வங்கிக் கணக்குகள் நாளை முதல் இயங்காது

RBI பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறது. அந்தவகையில், நவ.20 (நாளை) முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளின்படி, செயல்படாத கணக்குகள் (Dormant), செயலற்ற கணக்குகள் (Inactive) மற்றும் இருப்பு இல்லாத கணக்குகள் (ஜீரோ பேலன்ஸ் கணக்குகள்) ஆகியவை முடக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வகையான கணக்குகள் மோசடி அல்லது தவறான பயன்பாட்டிற்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


