News May 7, 2024
SRH-க்கு பதிலடி கொடுத்த CSK, RCB, MI

ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹைதராபாத் அணிக்கு, பெங்களூரு, சென்னை, மும்பை அணிகள் பதிலடி கொடுத்துள்ளன. அதிக முறை 200+ ரன்களுக்கு மேல் குவித்து மகத்தான வெற்றிகளை பதிவு செய்து வந்த SRH அணி, மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது. MI, CSK, RCB அணிகளை அடுத்தடுத்து வீழ்த்திய ஹைதரபாத் அணி, அதே அணிகளிடம் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் ஐபிஎல் களம் சூடுபிடித்துள்ளது.
Similar News
News August 21, 2025
தடகளம்: பதக்கங்களை குவிக்கும் தமிழக வீரர்கள்

64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான போல் வால்ட்டில் கவுதம், ரீகன், கமல் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று புது சாதனை படைத்துள்ளனர். 100 மீ ஓட்டத்தில் தமிழரசு, ராகுல் ஆகியோர் தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்றனர். மகளிருக்கான 100 மீ ஓட்டத்தில் தனலெட்சுமி, அபிநயா ராஜராஜன் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
News August 21, 2025
பெரிய வாக்கு வங்கி மதிமுகவுக்கு இல்லை: வைகோ

தமிழக அரசியல் வரலாற்றில் தனது பெயர் இடம்பெறும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக வைகோ கூறியுள்ளார். திருவான்மியூரில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 2026 தேர்தலிலும் திமுக உடனான கூட்டணி நீடிக்கும் என்றார். திமுகவுக்கு இருக்கும் பெரிய வாக்கு வங்கி மதிமுகவுக்கு இல்லை என்றாலும், மதிமுக தொண்டர்கள் வீரர்கள் போல் உறுதியானவர்கள் என தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் மதிமுகவின் செல்வாக்கு உயருமா?
News August 21, 2025
செயலற்று கிடக்கும் 13 கோடி ஜன்தன் கணக்குகள்!

நாட்டில் மொத்தமுள்ள 56.03 கோடி ஜன்தன் வங்கி கணக்குகளில், ஜூலை 31-ம் தேதி கணக்குப்படி, 13.04 கோடி கணக்குகள்(23%) செயலற்று இருப்பதாக மத்திய இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி தெரிவித்துள்ளார். உ.பி.யில் அதிகபட்சமாக 2.75 கோடி கணக்குகளும், பிஹாரில் 1.39 கோடி கணக்குகளும் செயலற்று உள்ளன. 2 வருடங்களுக்கு எந்த பரிவர்த்தனையும் இல்லாமல் வங்கி கணக்கு இருந்தால், அது செயலற்றதாக மாறும் என்பது RBI விதி.