News July 24, 2024

CSK வாய்ப்பு கடவுள் கொடுத்த பரிசு: மதீஷா பதிரனா

image

CSK அணிக்காக விளையாடும் வாய்ப்பு பெற்றதை கடவுள் கொடுத்த பரிசாக கருதுவதாக இலங்கை அணி வீரர் மதீஷா பதிரனா கூறியுள்ளார். ஐ.பி.எல் தொடரின்போது தோனி உடனான ட்ரஸ்ஸிங் ரூம் அனுபவப் பகிர்வு தன்னைப் போன்ற இளம் வீரர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததெனக் கூறிய அவர், குறிப்பாக இலங்கையிலிருந்து விளையாட வருபவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் மிக முக்கியமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 3, 2026

10 MLA-க்களை பெற சீமான் சீரியஸான திட்டம்

image

கடந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் காரைக்குடி உள்ளிட்ட 60 தொகுதிகளை சீமான் டிக் அடித்துள்ளாராம். அத்தொகுதிகளில் வீடு வீடாக பிரசாரம் செய்தால் வெற்றி பெறலாம் என்பதே அவரது இலக்கு என தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், ‘60 லட்சியம்; 10 நிச்சயம்’ என்ற கணக்கில் 10 MLA-க்களை நிச்சயம் இம்முறை பேரவைக்குள் அனுப்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் சீமான் உள்ளதாக கூறப்படுகிறது. நீங்க என்ன சொல்றீங்க?

News March 3, 2026

விவசாயிகளுக்கு இந்த அடையாள எண் அவசியம்!

image

ஆதார் கார்டு போல, அனைத்து விவசாயிகளும் ‘விவசாய அடையாள அட்டை’ வைத்திருக்க வேண்டும் என தமிழக விவசாயத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், அரசின் மானியங்கள், பயிர்க் காப்பீடு & நேரடி நிதி உதவிகளை (DBT) ஊழலின்றி, நேரடியாக கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆதார் எண்ணை கொடுத்து, இந்த அடையாள எண்ணை பெற, <>இங்கே <<>>கிளிக் செய்யவும். அனைத்து விவசாயிகளையும் சென்று சேர, அதிகளவில் ஷேர் செய்யவும்.

News March 3, 2026

20 நாள்களில் கூடுதலாக ₹6,000 வழங்கிய தமிழக அரசு

image

நிதித் திட்டங்களில் பயன்பெறுவோருக்கு 20 நாள்களுக்குள் கூடுதலாக ₹6,000 வழங்கி தமிழக அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. வழக்கம்போல் ₹1,000 உரிமைத் தொகையை எதிர்பார்த்த மகளிருக்கு பிப்.13 அன்று கூடுதலாக ₹4,000 சேர்த்து ₹5,000 வழங்கப்பட்டது. அதேபோல், இன்றைய தினம் மாற்றுத் திறனாளிகள், முதியோர், கைம்பெண் உதவித் தொகை பெறுவோருக்கு மேலும் ₹2,000 சிறப்பு நிதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!