News May 17, 2024
பெங்களூருவில் அதிரடி காட்டிய CSK வீரர்கள்

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் RCB-க்கு எதிரான ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய CSK வீரர்கள்:
▶எம்.எஸ்.தோனி 84*(48) – 2019
▶டேவன் கான்வே 83(45) – 2023
▶அம்பதி ராயுடு 82(53) – 2018
▶சுரேஷ் ரெய்னா 62(35) – 2015
▶ஷிவம் துபே 52(27) – 2023
▶துஷர் தேஷ்பாண்டே 3/45 – 2023
Similar News
News December 27, 2025
கிருஷ்ணகிரியில் துடிதுடித்து பலி!

தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகா சேசுராஜபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் ஜான்பால்(27). விவசாயியான இவர் கடந்த டிச.25ஆம் தேதி பைக்கில் தப்பகுளி(32) என்பவருடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது நாட்ராம்பாளையம் – அஞ்செட்டி சாலையில் நிலைதடுமாறி பைக் கவிழ்ந்ததில் படுகாயமடைந்த ஜான்பால், சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி உயிரிழந்தார். தப்பகுளி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
News December 27, 2025
குளிர்காலத்துக்கான ஒரு சூப்பர் ஃபுட் இது!

குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், சோர்வு ஆகியவற்றை தடுக்க பூசணி விதைகள் ஒரு சூப்பர் ஃபுட் என நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால், *இதில் உள்ள ஜிங்க், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது *உடலுக்கு ஆற்றலை தருகிறது *மெக்னீசியம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது *சரும வறட்சியை தடுக்கிறது *நார்ச்சத்து செரிமானத்தை சீராக்குகிறது.
News December 27, 2025
பிரபல நடிகை மரணம்.. பரபரப்பு தகவல்

‘தி லயன் கிங்’ புகழ் <<18667657>>நடிகை இமானி ஸ்மித்<<>>(25) கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 6 நாள்களுக்கு முன்பு ஆண் நண்பரால் தனது குழந்தைகள் கண்முன்னே இமானி படுகொலை செய்யப்பட்டார். தான் கொடுத்த பணத்தை இமானி திருப்பி கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் கொன்றதாக கைது செய்யப்பட்ட ஜோர்டன் போலீசாரிடம் கூறியுள்ளார். ஏற்கெனவே கணவரை பிரிந்து வாழும் இமானியின் 2 குழந்தைகள் தற்போது பரிதவித்து வருகின்றனர்.


