News March 28, 2025
பர்பிள் தொப்பியை தட்டித் தூக்கிய சிஎஸ்கே வீரர்…!

சிஎஸ்கே அணியால் ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட நூர் அகமது, அதிக விக்கெட்டுகளை (7) வீழ்த்தியவர்களுக்கான பர்பிள் தொப்பியை தனதாக்கிக் கொண்டுள்ளார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், ஆர்சிபி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தை லக்னோ வீரர் ஷர்துல் தாகூர் (6) பிடித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
இந்தியாவின் துயரத்தில் பங்கேற்ற நாடுகள்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. 12 பேர் உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த துயரமான தருணத்தில் இந்தியாவுடன் நிற்பதாக பல உலக நாடுகள் தெரிவித்துள்ளன. அந்த வகையில் இஸ்ரேல், இலங்கை, மலேசியா, அயர்லாந்து, சீனா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளன.
News November 12, 2025
போகும் போது எதையும் கொண்டு போக முடியாது..

நடிகர் அபிநய்யின் பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. உங்களிடம் பணம் இருந்தால், தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். போகும் போது என்னங்க கொண்டுபோக போறோம். நம்மால் எதையும் எடுத்துட்டு போக முடியாது. ஒரு பானையில் ஒரு பிடி சாம்பலுடன் நமது வாழ்க்கை முடிந்துவிடும். அதனால், உயிருடன் இருக்கும் போது பிறருக்கு உதவுங்கள் என்று அவர் கூறுகிறார். உண்மையும் அதுதானே. #RIP
News November 12, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 12, ஐப்பசி 26 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:30 AM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 AM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: மூலம் ▶சிறப்பு: காலபைரவாஷ்டமி. ▶வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்.


