News September 9, 2025
கோடிகளை அள்ளும் CSK வீரர் பிரெவிஸ்

தென்னாப்பிரிக்க வீரர் பிரெவிஸுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. ஆம், SA20 சீசன் 4 ஏலத்தில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி அவரை ₹8.30 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த லீக்கில் இதுதான் உச்சபட்ச தொகையாகும். CSK அணிக்காக விளையாடும் இவரை பேபி ABD என்று அழைக்கின்றனர். மற்றொரு வீரரான மார்க்கரமை டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் ₹7 கோடிக்கு வாங்கியுள்ளது.
Similar News
News September 10, 2025
திமுகவுக்கு தோல்வி பயம்: தவெக அருண்ராஜ்

விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி தர மறுப்பது திமுகவின் பயத்தை காட்டுவதாக தவெக கொள்கை பரப்புப் பொ.செ அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மக்களிடையே தவெகவிற்கு பெருகி வரும் செல்வாக்கை பார்த்து திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும், அதனால் விஜய்க்கு நெருக்கடி கொடுக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். திமுக அரசு கொடுக்கும் நெருக்கடி தவெகவுக்கு சாதகமாக முடியும் என்று அருண்ராஜ் கூறினார்.
News September 10, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 454 ▶குறள்: மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு. ▶பொருள்: அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.
News September 10, 2025
விஜய்யுடன் மோத தயாராகும் சூர்யா

சூர்யாவின் ‘கருப்பு’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படாததால் தீபாவளி ரேஸில் இருந்து ‘கருப்பு’ படம் விலகியது. இதையடுத்து படக்குழு பொங்கல் ரிலீஸை குறி வைத்துள்ளது. விஜய்யின் ‘ஜனநாயகன்’ 9-ம் தேதி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நாள் அல்லது 14-ம் தேதி ‘கருப்பு’ வெளியாகும் என்று கூறப்படுகிறது. எந்த படத்தை முதலில் பார்ப்பீங்க?