News March 23, 2025
சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் நாளை மோதல்

நாளைய ஐபிஎல் போட்டியில் 2 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஹைதராபாத்தில் மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. சென்னையில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. இந்த 2 போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்கள், ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையில் காண முடியும்.
Similar News
News March 24, 2025
பாகிஸ்தான் தினத்திலும் தோல்வி.. கடுப்பில் ரசிகர்கள்!

நியூசிலாந்துக்கு எதிரான 4வது T20Iல் பாகிஸ்தான் 115 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய, அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இன்று பாகிஸ்தான் தினம். அதாவது, பாகிஸ்தானின் முதல் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம். இன்று கூட ஒரு போட்டியை வென்று நாட்டிற்கு கவுரவம் சேர்க்க முடியாதா என ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள். தொடர்ந்து அடிமேல் அடி வாங்கும் பாகிஸ்தானின் நிலைக்கு காரணம் என்ன?
News March 23, 2025
இரவு 11 மணிக்கு மேல் தூங்குகிறீர்களா?

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நாம் தூங்கும் நேரமே குறைந்துவிட்டது. முடிந்தவரை தூங்க முயற்சிக்கிறோம். ஆனால், இரவு 11 மணிக்கு மேல் விழித்திருப்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் டாக்டர்கள். லேட்டாக தூங்குவதால் உங்கள் தூக்கத்தின் தரம் பாதிக்கும், ஜீரணமும் சரியாக இருக்காது, தூங்கி எழுந்த பின்பும் சோர்வாக உணர்வீர்கள். நோய் எதிர்ப்பு சக்தியையும் இது மிகவும் பாதிக்கும் என எச்சரிக்கின்றனர்.
News March 23, 2025
CAPTAIN’S KNOCK… அதிரடி காட்டிய ருதுராஜ்

எம்ஐ அணியின் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், 26 பந்துகளில் 53 ரன்கள் குவித்து அசத்தினார். 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் அதிரடியாக அவர் அரைசதத்தை கடந்த நிலையில், விக்னேஷ் புதுர் ஓவரில் ஆட்டமிழந்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 155 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சிஎஸ்கே அணி 8 ஓவர்களில் 79 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.