News May 1, 2024
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் CSK

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ், ரஹானே பொறுமையாக ஆடிவந்தனர். ஒன்பதாவது ஓவரின் முதல் பந்தில் ரஹானே ஆட்டமிழந்தார். பின்னர் அதே ஓவரில் 3ஆவது பந்தில் தூபே ரன்கள் ஏதும் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரிலேயே ஜடேஜா(2) LBW முறையில் ஆட்டமிழந்தார். CSK 10 ஓவரில் 71/3 ரன்கள் எடுத்துள்ளது.
Similar News
News September 21, 2025
2027-ல் நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை

மும்பை – அகமதாபாத் இடையே 2027 டிசம்பரில் புல்லட் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதன் வருகையின் மூலம், 9 மணி நேரமாக இருக்கும் பயண நேரம் 2 மணி நேரமாக குறையும் எனவும், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் புறப்படும் வகையில் சேவைகள் வடிவமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இதற்கு முன்பதிவு செய்ய வெண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News September 21, 2025
இந்த பெருமை எனக்கு மட்டும் உரியது அல்ல: மோகன்லால்

சினிமாவில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வானது குறித்து மோகன்லால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பெருமை தனக்கு மட்டுமல்ல, இத்தனை வருட பயணத்தில், தன்னுடன் நின்ற ஒவ்வொருவருக்கும் உரியது எனவும், அவர்களே ஊக்கம் தந்து தன்னை உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த அங்கீகாரத்தை ஆழ்ந்த நன்றியுடனும், முழுமனதுடனும் ஏற்றுக்கொளவதாக தெரிவித்துள்ளார்.
News September 21, 2025
செப்டம்பர் 21: வரலாற்றில் இன்று

*உலக அமைதி நாள். *சம இரவு நாள் (வடக்கு அரைக்கோளம்). *1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் மன்னராட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது. *1949- சீன புரட்சி வெற்றி பெற்று, மா சே துங் நாட்டின் தலைவரானார். *1979 – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் பிறந்தநாள்.