News March 24, 2025
MI அணியை வீழ்த்தி CSK அபாரம்…!

MI அணியை எளிதில் வீழ்த்தி 18வது ஐபிஎல் சீசனை CSK அணி வெற்றியுடன் தொடங்கி உள்ளது. முதலில் பேட்டிங் செய்த MI அணியில் ரோஹித்(0), கேப்டன் சூர்யகுமார் யாதவ்(29), திலக் வர்மா(31) உட்பட முன்னணி வீரர்கள் அனைவரும் பெரியளவில் சோபிக்க தவறினர். CSK வீரர் நூர் முகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 156 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய CSK அணி, ருதுராஜ், ரச்சினின் அரை சதத்தால் வெற்றி பெற்றது.
Similar News
News January 2, 2026
நீலகிரி: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு இங்கு <
News January 2, 2026
சற்றுமுன்: பொங்கல் பரிசு.. இனிப்பான செய்தி

பொங்கல் பரிசுத் தொகுப்பாக 2.22 கோடி ரேஷன் கார்டுகளுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜன.8-ம் தேதி பொங்கல் தொகுப்பு விநியோகத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரொக்கப் பணம் வழங்குவது குறித்து அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 2, 2026
தொடர் போராட்டம்.. ஆசிரியர்கள் கைது

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரிய ஜாக்டோ – ஜியோ அமைப்பினருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியான நிலையில், மறுபுறம் சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு துயரமே மிஞ்சியுள்ளது. 8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர். இவர்களின் கோரிக்கைகளுக்கும் அரசு தீர்வுகாண வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.


