News March 28, 2025
பரிதாப நிலையில் சிஎஸ்கே… பயம் காட்டும் ஆர்சிபி!

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் திரிபாதி(5), கேப்டன் ருதுராஜ்(0), ஹூடா(4), சாம் கரன்(8) ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். ஆர்சிபி வீரர் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 9 ஓவர்கள் முடிவில் 53 ரன்கள் எடுத்துள்ள சிஎஸ்கே, இன்னும் 11 ஓவர்களில் 144 ரன்கள் எடுக்குமா?
Similar News
News April 1, 2025
வெளிநாட்டு குழந்தைகளை அழைத்து வரலாமா?

வெளிநாட்டு குழந்தைகளை சட்டவிரோத நோக்கத்துடன் நமது நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து பிஎன்எஸ் சட்ட 141ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண் எனில் 18 வயதுக்கு குறைவான வயதுடையோரையும், பெண் எனில் 21 வயதுக்கு குறைவான வயதுடையோரையும் உள்நோக்கத்துடன் (அ) வேறு காரணத்திற்காக அழைத்து வரக்கூடாது. அப்படி அழைத்து வருவோருக்கு 10 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
News April 1, 2025
3 நாள் STOP பண்ணுங்க… அதிசயம் நடக்கும்!

தொடர்ந்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் ஒரு 3 நாள்களுக்கு, போன் பயன்படுத்துவதை நிறுத்தினால், ஆச்சரியகரமான மாற்றம் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளைஞர்கள் சிலரை 72 மணிநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை நிறுத்தி சோதித்தனர். அப்போது அவர்களின் மூளை அதிசயிக்கத்தக்க முறையில் தன்னைத் தானே ரீபூட் செய்துகொண்டு சிறப்பாக செயல்பட்டதை கண்டறிந்தனர். நீங்களும் ட்ரை பண்ணலாமே?
News April 1, 2025
சிஎஸ்கே போட்டிக்கு டிக்கெட் புக் பண்ண ரெடியா?

ஏப். 5-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை – டெல்லி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்க உள்ளது. வழக்கம்போல், குறைந்தபட்ச டிக்கெட் ரூ.1,700-ஆகவும், அதிகபட்ச டிக்கெட் ரூ.7,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் புக்கிங் ஸ்டார்ட் ஆன சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிடும். நாளை எப்படி இருக்குமோ?