News April 13, 2025
பரிதாபமான நிலையில் CSK

ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன்களான CSK, MI ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ளன. குறிப்பாக IPL-லில் அதிக ரசிகர் பட்டத்தை வைத்துள்ள CSK கடைசி இடத்தில் உள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சொதப்பி வரும் CSK வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே தகுதிச் சுற்றுக்கும் முன்னேற முடியும். இல்லையென்றால், லீக் சுற்றுடன் வெளியேறும் நிலை ஏற்படும்.
Similar News
News November 6, 2025
இறந்தவர் பெயரில் பிரேசில் மாடலுக்கு வாக்காளர் பதிவு

ராகுல் காந்தி குற்றஞ்சாட்டிய <<18212147>>பிரேசில் மாடலின்<<>> வாக்காளர் பதிவை India Today ஆய்வு செய்துள்ளது. அதில், பிரேசில் மாடல் வாக்காளர் பதிவின் உண்மையான சொந்தக்காரர் குனியா என்பதும், அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பே இறந்ததும் தெரியவந்துள்ளது. அவரது பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருப்பதையும், அதுவும் வெளிநாட்டு பெண்ணின் புகைப்படத்துடன் இருப்பதையும் கண்டு குனியாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
News November 6, 2025
சற்றுமுன்: யூடியூப் பிரபலம் காலமானார்

தனது வீடியோக்களால் மக்கள் மனதில் பயணம் செய்யும் ஆர்வத்தை தூண்டிவந்த பிரபல யூடியூபர் அனுனய் சூட் (32 வயது) அகால மரணமடைந்தார். அமெரிக்காவில் வீடியோ ஷூட் முடித்துவிட்டு வந்து படுக்கையில் விழுந்தவர் காலையில் எழுந்திருக்கவேயில்லை. இவரது மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. இன்ஸ்டாவில் 14 லட்சம், யூடியூபில் லட்சக்கணக்கில் ஃபாலோயர்கள் வைத்துள்ள இவரின் மறைவு பயண ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. RIP
News November 6, 2025
புது வரலாறு படைத்த ஷீத்தல் எனும் சிங்க பெண்

2 கைகள் இல்லாமல் வில்வித்தையில் பல சாதனைகளை ஷீத்தல் தேவி தொடர்ந்து படைத்து வருகிறார். சமீபத்தில் சீனாவில் நடந்த உலக பாரா வில்வித்தை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். தற்போது மீண்டும் ஒரு வரலாற்றை படைத்துள்ளார். ஆசிய கோப்பைக்கான இந்திய ஜூனியர் அணியில் அவர் தேர்வாகியுள்ளார். மாற்றுத்திறனாளி ஒருவர் பொது அணிக்கு தேர்வு செய்யப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை.


