News April 5, 2025

CSK-DC போட்டி: மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்

image

சேப்பாக்கம் மைதானத்தில், CSK- DC அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி இன்று நடைபெறவுள்ளது. ரசிகா்களுக்கு தடையற்ற பயணத்தை வழங்கும் வகையில், போட்டிக்கான டிக்கெட்டில் இருக்கு QR கோடை மெட்ரோ ரயில் காண்பித்து பயணிக்கலாம். எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும், போட்டி நடைபெறும் மைதானத்துக்கு அருகிலுள்ள அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கும் இடையே எவ்வித கட்டணமும் இன்றி பயணிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

Similar News

News April 8, 2025

சிக்ஸ் பேக்ஸ் மோகம்- பலியான பாடி பில்டர் 

image

காசிமேட்டில் உடலை விரைவாக கட்டுமஸ்தாக மாற்ற நினைத்த ராம்கி(35), தனது பயிற்சியாளர் தினேஷ் பரிந்துரைத்த ஸ்டீராய்டை எடுத்துக்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர்களின் பரிந்துரை இல்லமால் ஸ்டீராய்டு எடுத்து கொண்டதால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. தற்போது, சமூக வலைத்தளங்களை பார்த்து வரும் மோகத்தால் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. 

News April 8, 2025

ரேஷன் அட்டையில் திருத்தும் செய்யணுமா?

image

வரும் ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சென்னை மண்டல உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தபட உள்ளன. பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் செய்து கொள்ளலாம். இலவசமாகவே ரேஷன் கார்டில் அப்டேட் செய்துகொள்ளலாம். இந்த அறிவிப்பால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷேர் பண்ணுங்க

News April 8, 2025

மகாவீர் ஜெயந்தி: இறைச்சி கடைகள் மூடல்

image

பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் வருகிற 10ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. ஆகவே, இறைச்சிக் கூட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் செய்யுங்க

error: Content is protected !!