News April 14, 2025
தட்டித் தூக்கிய CSK பவுலர்கள்

இன்றைய IPL போட்டியில், LSG அணியை வெறும் 166/7 ரன்களில் சுருட்டியிருக்கிறது CSK அணி. டாஸ் வென்ற CSK கேப்டன் தோனி, LSG அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார். அதன்படி களமிறங்கிய LSG, ஆரம்பம் முதலே சொதப்பியது. அதிரடி நாயகர்கள் மார்க்ரம், பூரன் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தாலும் கேப்டன் பண்ட் நிதானமாக விளையாடி 63 ரன்கள் குவித்தார். CSK அணியின் பதிரனா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
Similar News
News April 16, 2025
வான்கடே மைதானத்தில் ஜொலிக்கும் ரோகித் பெயர்

ரோகித் சர்மாவை கவுரவிக்க மும்பை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. ஆம்! வான்கடே மைதானத்தில் ஒரு கேலரி-க்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் பெயரை வைக்க, மும்பை கிரிக்கெட் சங்க ஆண்டு பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் முன்னாள் BCCI தலைவர் சரத் பவார் மற்றும் பேட்டிங் ஜாம்பவான் அஜித் வடேகர் ஆகியோரின் நினைவாக மேலும் இரண்டு கேலரிகளுக்கு பெயரிடப்படும் என்றும் MCA உறுதிப்படுத்தியுள்ளது.
News April 16, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶எப்போதும் புன்னகையுடன் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்வோம், ஏனென்றால் புன்னகையே அன்பிற்கான தொடக்கம் ▶ தனிமையும், தேவையற்றவர் என்ற உணர்வுமே மிகவும் மோசமான வறுமையாகும் ▶ ஓர் எளிய புன்னகை செய்யக் கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் ஒருபோதும் அறிந்திருப்பதில்லை ▶ மற்றவர்களுக்காக வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல ▶உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியவில்லையென்றால், வெறும் ஒருவருக்காவது உணவளியுங்கள்
News April 16, 2025
அடுத்த 3 நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு உள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்ச வெப்பநிலையாக 36 – 37 டிகிரி செல்சியஸ் இருக்கும். அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, மக்கள் அதிக அளவு தண்ணீர், மோர் போன்றவற்றை குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.