News March 29, 2025
CSK-வை கிண்டல் செய்ததால் ஆத்திரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கிண்டல் செய்ததால், மது போதையில் இளைஞரை தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெருங்குடி அடுத்த கல்லுக்குட்டை பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளன ஜீவரத்தினம் என்பவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மோதல் தொடர்பாக, அப்பு ஜெகதீஷ் உள்ளிட்ட 7 பேரை துரைப்பாக்கம் போலீசார் நேற்று (மார்.28) கைது செய்தனர்.
Similar News
News July 6, 2025
சைபர் மோசடி குறித்து சென்னை காவல்துறை முக்கிய அறிவுரை

சென்னை பெருநகர காவல் துறை சைபர் மோசடிகள் குறித்து எச்சரித்துள்ளது. மோசடியில் சிக்கினால், உடனடியாக வங்கி அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பரிவர்த்தனைகளை முடக்க வேண்டும். மேலும், 1930 என்ற எண்ணுக்கு அழைத்து உதவி பெறலாம். போலி இணையதளங்கள் மூலம் மக்கள் ஏமாறாமல் இருக்க, அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News July 5, 2025
சென்னை வானில் சர்வதேச விண்வெளி நிலையம்: நாசா தகவல்

சர்வதேச விண்வெளி மையம் பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் மணிக்கு 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது. இந்த விண்வெளி மையத்தை சில சமயங்களில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 6 முதல் 10 வரை சென்னை மக்கள் இரவு 8 மணி முதல் 8.05 மணி வரை ISS-ஐ வானில் காண முடியும் என நாசா அறிவித்துள்ளது. இது ஒரு அரிய வானியல் நிகழ்வாகும்.
News July 5, 2025
சென்னையில் நாளை மினி மாரத்தான்

சர்வதேச கூட்டுறவு நாளை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை சார்பில் ‘COOP-A-THON’ மினி மாரத்தான் போட்டி சென்னை தீவுத்திடலில் நாளை (ஜூலை 6, ஞாயிறு) காலை 5:30 மணிக்கு நடைபெறுகிறது. “சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம்” என்ற மையக்கருத்தில் 5 கி.மீ. தூரத்திற்கான இந்த ஓட்டப்பந்தயத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.