News March 29, 2025
CSK-வை கிண்டல் செய்ததால் ஆத்திரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கிண்டல் செய்ததால், மது போதையில் இளைஞரை தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெருங்குடி அடுத்த கல்லுக்குட்டை பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஜீவரத்தினம் என்பவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மோதல் தொடர்பாக, அப்பு ஜெகதீஷ் உள்ளிட்ட 7 பேரை துரைப்பாக்கம் போலீசார் நேற்று (மார்.28) கைது செய்தனர்.
Similar News
News October 19, 2025
செங்கல்பட்டு: இரவு காவல் அலுவலர்களின் விவரம்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக இரவு பணி செய்யும் காவல் அலுவலர்களின் தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது அவசரத் தேவை உள்ள நேரங்களில் மேற்கண்ட பட்டியலில் உள்ள காவல் நிலைய இரவு ரோந்து அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 19, 2025
செங்கல்பட்டு: POST OFFICE-ல் வேலை ரெடி! மிஸ் பண்ணிடாதீங்க

இந்திய அஞ்சல் வங்கியில் வேலை காலியாக 348 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.10.2025. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News October 19, 2025
செங்கல்பட்டிற்கு ஆரஞ்ச் அலெர்ட்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் அக்.23ஆம் தேதி செங்கல்பட்டிற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், தீபாவளி மறுதினம் கனமழை பெய்யும் எனவும், 22, 24ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.