News April 19, 2025
CSIR நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

சிஎஸ்ஐஆர்(CSIR) நெட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கல்லூரிகள், யுனிவர்சிட்டிகளில் உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு போல 5 அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக CSIR தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த பிப்.28 முதல் மார்ச் 2-ம் தேதி வரை நாடு முழுவதும் 326 மையங்களில் நடந்த இத்தேர்வை 1.75 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் தற்போது <
Similar News
News November 6, 2025
மாணவி மீது விமர்சனம்: கொதித்தெழுந்த பேரரசு

கோவையில் ஆண் நண்பருடன் வெளியே சென்ற கல்லூரி மாணவி மூவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனிடையே, அப்பெண்ணின் நடத்தையை விமர்சிக்கும் வகையில் சிலர் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் உங்கள் பெண்ணுக்கு இதுபோன்று நடந்தால் இப்படி பேசுவீர்களா என இயக்குநர் பேரரசு ஆக்ரோஷத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். பெண் தனியாக சென்றால் பாலியல் வன்கொடுமை செய்வீர்களா என்றும் கேட்டுள்ளார்.
News November 6, 2025
நேர்மையாக தேர்தல் நடந்தால், NDA இருக்காது: பிரியங்கா

பிஹார் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், கோவிந்த்கஞ்ச் பகுதியில் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி ஈடுபட்டார். இதில் பேசிய அவர், பிஹார் தேர்தல் நேர்மையாக நடந்தால், NDA ஆட்சி தூக்கி எறியப்படும் என்று குறிப்பிட்டார். வளர்ச்சியை விட மதத்திற்கே பாஜக முன்னுரிமை அளிப்பதாக விமர்சித்த அவர், கடந்த 3 ஆண்டுகளில் பிஹாரில் 27 பாலங்கள் இடிந்து விழுந்ததாக குற்றஞ்சாட்டினார்.
News November 6, 2025
நாளையுடன் முடிகிறது… உடனே இதை பண்ணுங்க

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ்களை அப்லோடு செய்ய நாளையே(நவ.7) கடைசி நாள் என TNPSC தெரிவித்துள்ளது. நாளை சான்றிதழ்களை அப்லோடு செய்யாதவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல பரிசீலிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.<


