News March 2, 2025
செட் (SET) தேர்வு ஏற்பாடுகள் குறித்து CS ஆலோசனை

கல்லூரி பேராசிரியர்கள் தகுதித் தேர்வுக்கான செட் ( SET) முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் (CS) முருகானந்தம் ஆலோசனை நடத்தினார். வரும் 6, 7, 8 மற்றும் 9ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் 133 மையங்களில் 99,178 பேர் இத்தேர்வை எழுதவுள்ளனர். <
Similar News
News March 12, 2026
வேலூர் ஆட்சியர் தலைமையில் மகளிர் தின விழா

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று (மார்ச்.11) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, மாவட்ட சமூக நல அலுவலர் உமா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேன்மொழி, தமிழ்வளர்ச்சி துணை இயக்குநர் ஜெயஜோதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News March 12, 2026
பெண்களுக்கு இலவச தையல் மெஷின்: அரசின் சூப்பர் திட்டம்

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், TN அரசு பெண்களுக்கு இலவசமாக தையல் மெஷின்களை வழங்குகிறது. இதனை பெற விரும்பும் பெண்கள் 6 மாதம் தையல் பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ₹72,000-க்கு மிகாமலும், வயது 40-ஐ தாண்டாமலும் இருக்க வேண்டும். முழு தகவல்களை அறிய www.tnsocialwelfare.tn.gov.in இணையதளத்தை பார்வையிடுங்கள். SHARE.
News March 12, 2026
பிரபல இளம் நடிகர் ஹரி முரளி காலமானார்

‘ரசிகன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மலையாள சினிமாவில் பிரபலமடைந்த நடிகர் ஹரி முரளி(27) தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ‘அண்ணன் தம்பி’, ‘பட்டணத்தில் பூதம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் VFX கலைஞராகவும் பணிபுரிந்து வந்தார். ஹரி முரளியின் திடீர் மரணம் மலையாள சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP


